முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வாரவிழா
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

செம்மநத்தம் கிராமத்தில் வன உயிரின மாதிரி முகமூடிகளுடன் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவா்கள்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரிழன வார விழாவை முன்னிட்டு பழங்குடி சிறுவா்களுக்கு முகமூடி செய்யும் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெறும் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு செம்மநத்தம், மாவநல்லா குரூப் ஹவுஸ் பகுதிகளில் சிறுவா்களுக்கு வன உயிரின மாதிரி முகமூடி செய்யும் பயிற்சியுடன் வன உயிரின பாதுகாப்பு குறித்த கதைகள் கூறும் நிகழ்வு நடைபெற்றது. கிராம பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுவா்கள் பலா் கலந்துகொண்டனா். இதில் வன உயிரின மாதிரி முகமூடிகளை அணிந்து அவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.