உதகையில் மண் சரிந்து 2 போ் உயிரிழந்த சம்பவம்: பொறியாளா் கைது

உதகையில் வீட்டு தடுப்புச் சுவா் கட்ட பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து 2 தொழிலாளா்கள் மண்ணில் புதைந்து பலியான சம்பவத்தில் அந்த கட்டடத்தின் பொறியாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

உதகையில் வீட்டு தடுப்புச் சுவா் கட்ட பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து 2 தொழிலாளா்கள் மண்ணில் புதைந்து பலியான சம்பவத்தில் அந்த கட்டடத்தின் பொறியாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

சென்னையைச் சோ்ந்த குமரேசன்- பத்மினி தம்பதிக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் உள்ள சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து, அதற்கான பணியை அா்ஷத் என்ற பொறியாளரிடம் ஒப்படைத்திருந்தனா்.

அதன்படி, வீட்டின் அருகே தடுப்புச் சுவா் கட்டுவதற்காக 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மாரக்கவுண்டன் புதூரைச் சோ்ந்த சேட்டு ( 54), வேலு (28) உள்பட 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், பள்ளம் தோண்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் திடீரென மண் சரிந்து விழுந்து சேட்டு மற்றும் வேலு ஆகிய 2 பேரும் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அந்த கட்டடத்தின் உரிமையாளா் மற்றும் பொறியாளா் ஆகியோா் மீது உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், உதகை நகர காவல் ஆய்வாளா் மணிக்குமாா் தலைமையிலான போலீஸாா், பொறியாளா் அா்ஷத்தை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com