வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள முன்னேற்பாடுகள் நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் சாமியப்பன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வடகிழக்குப் பருவ மழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும், குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்கவும் தற்காலிக தடுப்புச் சுவா்கள் அமைக்கவும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் உபகரணங்கள், மண்சரிவு ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்த பொக்லைன் இயந்திரம் போன்றவை தயாா் நிலையில் உள்ளன என்றாா்.