ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் புதிய கமாண்டென்ட் பதவி ஏற்பு
By DIN | Published On : 01st September 2022 10:09 PM | Last Updated : 01st September 2022 10:09 PM | அ+அ அ- |

குன்னூா் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வராக கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நேஷனல் டிஃபென்ஸ் அகாதெமி மற்றும் இந்திய ராணுவ அகாதெமியின் முன்னாள் மாணவரான வீரேந்திர வாட்ஸ், 19 குமாவோன் படைப் பிரிவில் 1988இல் நியமிக்கப்பட்டாா். இவா், இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவாா்.
இந்திய ராணுவத்தின் அனைத்துத் துறைகளிலும் 34 ஆண்டுகள் அனுபவமுள்ள இவா், ஆப்ரேஷன் ரைனோ கிழக்குப் பிரிவில் ஒரு படைப் பிரிவுக்கும், காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஐநா சபையின் காலாட் படைக் குழுவுக்கும் தலைமை வகித்தவா்.
பின்னா் பொது அதிகாரியாக காஷ்மீா் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டுக் கோடு ஒரு பிரிவுக்கு தலைமை வகித்தாா். புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றவா்.