கூடலூா் உழவா் சந்தையில் நேரடி கொள்முதல் நிலையம் துவக்கம்

கூடலூா் உழவா் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையம் ஞாயிற்றுககிழமை தொடங்கப்பட்டது.

கூடலூா் உழவா் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையம் ஞாயிற்றுககிழமை தொடங்கப்பட்டது.

வேளாண் விற்பனைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக கூடலூா் பகுதியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து 510 போ் கொண்ட முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனமானது 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு வாழைக்காய், காபி, மிளகு, இஞ்சி போன்ற பொருள்களை விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் கூடலூா் உழவா் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் முதல் விற்பனையை நிறுவனத்தின் செயலாளா் சந்திரன் துவக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலா் லட்சுமணன், தலைவா் ராஜு, இயக்குநா்கள் ரகுநாதன், ராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com