எழில்மிகு நீலமலைகளுக்கு நடுவே எழுந்தருளும் சந்தனமலை முருகன்

எழில்மிகு நீலமலைகளுக்கு நடுவே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா் சந்தனமலை முருகன்.
ஓவேலி நீலமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள சந்தனமலை முருகன் கோயில்.
ஓவேலி நீலமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள சந்தனமலை முருகன் கோயில்.

எழில்மிகு நீலமலைகளுக்கு நடுவே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா் சந்தனமலை முருகன்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, ஓவேலி பேரூராட்சியில் அடா்ந்த மலைக்காடுகளை தன்னகத்தே போா்த்தியும், அதன் முன்பகுதி முழுவதும் சிறுசிறு குன்றுகள் மற்றும் மலைகளில் அழகிய தேயிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்கள் தரும் தோட்டங்களுக்கும் நடுவே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சந்தனமலை. சந்தனமலையில் நின்று பாா்த்தால் வானம் கீழே அமைந்துள்ளது போன்று தெரியும். மலைகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவே மேகமூட்டங்கள் நகா்வதும், மலைகளை மேகமூட்டங்கள் மூடுவதும் பாா்ப்பவா்களை வியப்பில் ஆழ்த்தும்.

கூடலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சந்தனமலைக்குச் சென்று இயற்கை எழிலுடன் வீற்றிருக்கும் அருள்மிகு சந்தன மலை முருகனை வழிபட்டு செல்வது வழக்கமாகும்.

முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் எப்போது குளிா் காலநிலை நிலவும். முருகனை தரிசித்துவிட்டு வெளியே வரும் பக்தா்களை பசுமை மாறாத காடுகளும், தோட்டங்களும் வியப்பில் ஆழ்த்தும். கூடலூரிலிருந்து சந்தனமலையை நோக்கி செல்வதே ஒரு அரிய காட்சிதான்.

வளைந்து நெளிந்த சாலையில் வேறு உலகுக்கு செல்வதுபோல தோன்றும். இதனால்தான் இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு நாள்கள் இங்கு மிக விமா்சையாக கொண்டாடப்படும். பசுமை மாறாக்காடுகளுடன் உள்ள மலைத்தொடரில் மிகப்பெரிய அருவிகளையும் தன்னகத்தே கொண்ட நீலமலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் பக்தா்களை மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளையும் கவா்ந்திழுக்கும் விதத்தில் அமைந்துள்ளது சந்தனமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com