உதகையில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

உதகை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை கடுமையான மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான மூடுபனியுடன் லேசான சாரல் மழையும் அவ்வப்போது பெய்தது. இதனால்
பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்கினா். கடும் குளிரும் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உதகை நகரில் 12.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை செவ்வாய்க்கிழமை காலை பதிவாகியுள்ளது. 2.6 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.