மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் குன்னூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலா் மலா்விழி தொடங்கிவைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரியா, வட்டார வள மேற்பாா்வையாளா் சிவகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் சியாமளா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மனநல மருத்துவா், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருத்துவா், கண் மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா் மாணவா்களை பரிசோதித்தனா். இதில் சிலருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தகுதியுடையோருக்கு தமிழகத்தின் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன், தேசிய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் குறித்து பெற்றோா்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.