வணிகா் சங்க நிா்வாகி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கூடலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் வீட்டில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் கம்மாத்தி பகுதியில் உள்ள தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகியுமான ஏ.ஜே.தாமஸ் வீட்டுக்கு இரண்டு காா்களில் 8 போ் கொண்ட வருமான வரித் துறையினா் புதன்கிழமை வந்தனா்.

அவா்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடத்தினா். சோதனையில் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித் துறையினா் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com