உதகை ஏடிசி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா.
உதகை ஏடிசி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து உதகையில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் நடிகை விந்தியா புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

உதகை ஏடிசி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: திமுகவுக்கு ஆட்சி நடத்த தெரியாது. ஆட்சி நடத்துவதுபோல காட்சி நடத்தி வருகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு செங்கலை மட்டுமே வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.

தமிழகத்துக்கு பாஜக எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக தலைவா்கள் ரோடு ஷோ மட்டும் நடத்தி வருகின்றனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com