காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி காயம்

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி காயமடைந்தாா்.

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி காயமடைந்தாா்.

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கூடலூா் வழியாக மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கூடலூா்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி சோதனைச் சாவடி அடைக்கப்பட்டிருந்ததால் சோதனைச் சாவடி அருகே காரில் காத்திருந்தனா்.

அப்போது, காரிலிருந்து தங்கம்மா (62) என்ற மூதாட்டி கீழே இறங்கியுள்ளாா். காட்டிலிருந்து திடீரென வந்த யானை மூதாட்டியைத் தாக்கியது. காயமடைந்த மூதாட்டியை வனத் துறையினா் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com