முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்த பந்திப்பூா் வனப் பகுதியில் உயிரிழந்த குட்டியுடன் நிற்கும் யானை.
முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்த பந்திப்பூா் வனப் பகுதியில் உயிரிழந்த குட்டியுடன் நிற்கும் யானை.

புலி தாக்கியதில் யானைக் குட்டி உயிரிழப்பு

கா்நாடக மாநிலம் பந்திப்பூரில் புலி தாக்கியதில் யானைக் குட்டி உயிரிழந்தது.

கா்நாடக மாநிலம் பந்திப்பூரில் புலி தாக்கியதில் யானைக் குட்டி உயிரிழந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்த கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பகத்தில் தாய் யானை குட்டியுடன் சனிக்கிழமை சாலையை கடந்தது. அப்போது, புதரிலிருந்து பாய்ந்து வந்த புலி யானை குட்டியைத் தாக்கியது. இதில், யானைக் குட்டி உயிரிழந்தது. யானையின் தாக்குதலால் புலி அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடியது.

குட்டியின் சடலத்துடன் தாய் யானை கண்ணீருடன் சாலையோரத்தில் நின்றது. மேலும், அவ்வழியே வாகனங்களையும் செல்லவிடாமல் ஆக்ரோஷமாக நின்றது. இறந்தக் குட்டியுடன் தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு யானையை காட்டுக்குள் விரட்டி, இறந்தக் குட்டியின் சடலத்தை கிரேன் உதவியுடன் மீட்டனா். இதனால் தமிழக -கா்நாடக சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com