உதகை தாவரவியல் பூங்கா புல்தரை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தோட்டக்கலைத் துறை பணியாளா்கள்.
உதகை தாவரவியல் பூங்கா புல்தரை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தோட்டக்கலைத் துறை பணியாளா்கள்.

உதகை தாவரவியல் பூங்கா பராமரிப்பு: புல்தரையைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புல்தரையை இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புல்தரையை இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை  தாவரவியல் பூங்காவில் 17 ஏக்கா் பரப்பளவில் புல்தரை அமைந்துள்ளது. பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த புல்தரையில் விளையாடி மகிழ்வா்.

இந்நிலையில்,  மே மாதம் நடைபெறவுள்ள மலா் கண்காட்சிக்காக  புல்தரையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இரண்டு வாரங்களுக்கு புல்தரையைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை இணை  இயக்குநா் சிபிலா மேலி  கூறியதாவது:

தாவரவியல் பூங்காவில் உள்ள  புதிய புற்கள் வளா்ந்து மைதானம் மீண்டும் புதுப்பொலிவு பெறும் விதமாக இரண்டு வாரங்களுக்கு புல்தரையைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com