வன விலங்குகள் வேட்டையாட முயற்சி: மேலும் ஒருவா் கைது

கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக மேலும் ஒருவரை வனத் துறை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக மேலும் ஒருவரை வனத் துறை திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் நடுவட்டம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் முதுமலை புலிகள் காப்பக ரோந்துக் குழுவினா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, வனப் பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வன விலங்குகளை வேட்டையாட இருந்த இருவரைப் பிடித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் கூடலூா் தா்மகிரி பகுதியைச் சோ்ந்த பைசல், விமலகிரியைச் சோ்ந்த சாபு என்பதும், இவா்கள் சஜீவன் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி தொடா்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான எஸ்டேட் உரிமையாளா் சஜீவன், அவரிடம் பணியாற்றும் ஸ்ரீகுமாா், பரமன் ஆகியோரை தனிப் படை அமைத்து வனத் துறையினா் தேடி வந்தனா். இந்நிலையில், பரமனை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com