கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்காக கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட சயன், மனோஜ்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்காக கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட சயன், மனோஜ்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஏப்ரல் 29-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 2017-இல் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நீதிபதி அப்துல் காதா் விடுமுறையில் சென்றதால், மாவட்ட சாா்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. 

அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் மட்டுமே ஆஜராகினா்.  இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com