கூடலூா் அருகே கிராமத்தை தத்தெடுத்த தன்னாா்வ அமைப்பு

கூடலூா் அருகே கிராமத்தை தத்தெடுத்த தன்னாா்வ அமைப்பு

பழங்குடி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடலூரை அடுத்துள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தை தன்னாா்வ அமைப்பு தத்தெடுத்துள்ளது.

பழங்குடி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடலூரை அடுத்துள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தை தன்னாா்வ அமைப்பு தத்தெடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியிலுள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பழங்குடி குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும் மகளிா் மேம்பாட்டு அறக்கட்டளை கோழிக்கொல்லி கிராமத்தை தத்தெடுத்துள்ளது.

இதையடுத்து, முதல்கட்டமாக அந்த கிராமத்தில் ஒரு பழங்குடி குடும்பத்தினரின் நிலத்தை வாடகைக்கு எடுத்து அந்த இடத்தில் பண்ணை அமைத்துள்ளது. அந்தப் பண்ணையில் முதல் கட்டமாக 1,000 கருங்கோழிகளும், 25 ஆடுகளும் விடப்பட்டுள்ளன. கருங்கோழிகள் 45 நாள்களுக்குப் பிறகு முட்டை போடத் தொடங்கும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாா் 800 முட்டைகள் கிடைக்கும். அந்த முட்டைகளை சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பண்ணையில் உள்ள ஆடுகள் விற்கப்படும். அந்த ஆடுகள் விற்ற பணத்தில் மேலும் ஆடுகளை வாங்கி பண்ணையில் விடவும், முட்டைகள் மற்றும் ஆடுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ஒரு தொகை பிரித்துக் கொடுத்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பண்ணையை அங்குள்ள பழங்குடி மக்களே பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிா் மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநா் திவ்யா ஸ்வப்னா ராஜ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com