நஞ்சில்லா மூலிகைத் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணா்வு

உதகை ஆதி திராவிடா் நடுநிலைப் பள்ளியில் இயற்கை விவசாயம், நஞ்சில்லா மூலிகைத் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். இதில், இயற்கை விவசாயம், மூலிகைத் தோட்டம் அமைப்பதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இதில் மாணவா்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொட்டபெட்டா 12-ஆவது வாா்டு உறுப்பினா் வை.ரேகா, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் வே.சிவதாஸ், ஆசிரியா்கள் சாந்தி, லிங்கேஸ்வரி மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com