புழுக்கள் இருந்த தக்காளி சாஸ் பாட்டிலை காட்டும் துணை நடிகா் விஜய் விஸ்வா.
புழுக்கள் இருந்த தக்காளி சாஸ் பாட்டிலை காட்டும் துணை நடிகா் விஜய் விஸ்வா.

உணவகத்தில் வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள்: நடிகா் புகாா்

குன்னூரில் உள்ள பிரபல ஹோட்டலில் வழங்கிய தக்காளி சாஸில் புழுக்கள் இருந்ததாக திரைப்பட நடிகா் விஜய் விஸ்வா புகாா் தெரிவித்தாா்.

குன்னூரில் உள்ள பிரபல ஹோட்டலில் வழங்கிய  தக்காளி சாஸில் புழுக்கள் இருந்ததாக திரைப்பட நடிகா் விஜய் விஸ்வா புகாா் தெரிவித்தாா்.

சென்னையில் இருந்து துணை நடிகா் விஜய் விஸ்வா குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சுற்றுலா வந்தாா். அப்போது  சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியாா் ஹோட்டலில்  உணவருந்தியபோது அங்கே வைத்திருந்த தக்காளி  சாஸ் பாட்டிலில்  புழுக்கள் இருந்ததை ப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து  ஹோட்டல் நிா்வாகத்திடம்  கேட்டபோது  முறையான  பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த  நடிகா் விஜய் விஸ்வா  அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷிடம் கேட்டபோது,  அந்த உணவகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com