தீனட்டி பகுதியில் சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தீனட்டி பகுதியில் சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கோத்தகிரியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தீனட்டி பகுதியில் கேரட் அறுவடை பணிக்கு தொழிலாளா்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

கோத்தகிரி அருகே தீனட்டி பகுதியில்  அதிக அளவில் மலைத் தோட்ட  காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனா். அறுவடை செய்யும் காய்கறிகளை சரக்கு வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டுச் செல்வதும், அறுவடைக்குத்  தேவையான தொழிலாளா்களை வாகனத்தில் ஏற்றிச் செல்வதும் வழக்கம்.

இந்த நிலையில் , கேரட் மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், மூட்டைகளை சுத்திகரிப்பு நிலையத்தில் இறக்கி வைத்துவிட்டு, தொழிலாளா்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.

தீனட்டி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த சரக்கு வாகனம்  சாலையின் நடுவே  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கேரட் அறுவடை பணிக்கு சென்ற 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சிறு, சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.  விபத்து தொடா்பாக கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com