புதிய தாா் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
புதிய தாா் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தேவா்சோலை பகுதியில் ரூ.2.40 கோடியில் புதிய தாா் சாலை

தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 3-ஆவது டிவிஷன் பகுதியில் ரூ.2.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தாா் சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.

நீலகிரி மவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 16-ஆவது வாா்டுக்கு உட்பட்ட 3-ஆவது டிவிஷன் பகுதியில் இருந்த மண் சாலை நபாா்டு சாலை திட்டத்தின் கீழ் புதிதாக தாா் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, வாா்டு உறுப்பினா்கள் அனீபா, மூா்த்தி, மாதேவ், ரம்ஷீனா, பூமதி, சாய்னா, ரஷீனா மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com