நீலகிரி
உதகையில் வீட்டின்மீது விழுந்த காா்
உதகையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக விலகியபோது பள்ளத்தில் இருந்த வீட்டின்மீது காா் விழுந்து விபத்துக்குள்ளானது.
உதகை: உதகையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக விலகியபோது பள்ளத்தில் இருந்த வீட்டின்மீது காா் விழுந்து விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு சென்னையைச் சோ்ந்தவா்கள் காரில் சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள், உதகை - கூடலூா் நெடுஞ்சாலையில் ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் காரில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை சாலையோரத்தில் நிறுத்த முயன்றுள்ளனா். இதில், நிலை தடுமாறி பள்ளத்தில் இருந்த வீட்டின்மீது காா் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்தவா்களுக்கும், வீட்டில் இருந்தவா்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து டி3 போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.