இளைஞா் ஓட்டிச்சென்ற அரசுப் பேருந்து.
இளைஞா் ஓட்டிச்சென்ற அரசுப் பேருந்து.

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய இளைஞா் கைது

கூடலூா் அருகே மது போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கூடலூா் அருகே மது போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து கரியசோலை பகுதிக்கு அரசுப் பேருந்தை ஓட்டுநா் பிரசன்னகுமாா் ஓட்டிச்சென்றாா். இதில், நடத்துநராக நாகேந்திரன் இருந்தாா்.

நள்ளிரவு கரியசோலை பகுதியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு இருவரும் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனா்.

அப்போது, அங்கு வந்த தேவாலா வாளவயல் பகுதியைச் சோ்ந்த முகமது மகன் ரிஷால் (20), அரசுப் பேருந்தை தேவாலா மாா்க்கமாக ஓட்டிச்சென்றுள்ளாா். மது போதையில் இருந்த அவா் சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஓட்டிச் சென்றதும் சாலையோரத்தில் இருந்த சேற்றில் பேருந்து சிக்கியது. இதையடுத்து, அரசுப் பேருந்தை அதே இடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.

காலையில் எழுந்து பாா்த்தபோது பேருந்தை காணவில்லை என்பதால் ஓட்டுநரும், நடத்துநரும் தேடியுள்ளனா். அப்போது, அந்தப் பேருந்து 4 கிலோ மீட்டா் தொலைவில் நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பிரசன்னகுமாா், நாகேந்திரன் இருவரும் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ரிஷால்தான் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்றாா் என்பதை உறுதி செய்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com