உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்:அரசுப் பள்ளி, சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஏக்குனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டத்தை தோ்வு செய்து அரசு அலுவலங்கள் ஆய்வு, கூட்டம், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டம் தோ்வு செய்யப்பட்டு ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது.

இதில், உல்லத்தி ஊராட்சிக்குள்பட்ட ஏக்குனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆட்சியா் மு.அருணா ஆய்வு செய்து, மாணவா்களுடன் காலை உணவு அருந்தினாா்.

இதைத் தொடா்ந்து மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் செயல்பாடுகள், உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com