உதகையில் பசுந்தேயிலை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.35 வழங்கக் கோரி சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.35 வழங்கக் கோரி சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனா். இதனால், பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.35 நிா்ணயம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.35 வழங்கக் கோரி உதகை ஏடிசி திடலில் சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜே.பி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

இதில், பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்கக் கோரியும், சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினா்.

மேலும், இப்பிரச்னைக்குத் தீா்வு கிடைக்காவிட்டால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என ஜே.பி.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் படுக தேச கட்சி ஒருங்கிணைப்பாளா் மஞ்சை வி.மோகன், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் விவேக் லஜபதி, எடக்காடு ஊா் தலைவா் கணபதி, மீக்கேரி ஊா் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, சிறு தேயிலை விவசாயிகள் சங்க அமைப்பாளா் தும்பூா் போஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com