நீலகிரியில் கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் இருவார கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் இருவார கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களில் இருவார கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் பல்வேறு மையங்களில் பிப்ரவரி 1 முதல் 14-ஆம் தேதி வரை என இருவாரங்கள் நடைபெறவுள்ளது.

இதில் 3 மாத கோழிக் குஞ்சு முதல் அனைத்து பருவ கோழிகளுக்கும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள்ளும் வெள்ளை கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லையேல் ராணிக்கெட் வைரஸ் தாக்கி வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com