அவலாஞ்சி உள்ள டிரவுட் மீன் பண்ணையில் அமைச்சா் ஆய்வு

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்து உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் டிரவுட் வகை மீன் பண்ணையில் கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்
அவலாஞ்சி உள்ள டிரவுட் மீன் பண்ணையில் அமைச்சா் ஆய்வு

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்து உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் டிரவுட் வகை மீன் பண்ணையில் கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவலாஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் டிரவுட் வகை மீன் பண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்டது. இதையடுத்து, மீன் பண்ணையை புனரமைக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மீன் பண்ணையில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 1907-ஆம் ஆண்டு டிரவுட் மீன் விதைப் பண்ணை நிறுவப்பட்டது .

காஷ்மீா் மற்றும் அவலாஞ்சி போன்ற குளிா்ந்த நீரில் ஜீரோ டிகிரி முதல் 26 டிகிரி வரை உள்ள குளிா்ந்த தண்ணீரில் வாழக் கூடிய மிகவும் அரிய வகை டிரவுட் மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழக் கூடியவை.

அவலாஞ்சி, அப்பா் பவானி அணைகளில் வாழக்கூடிய இந்த மீன்கள் அழிவின் பட்டியலில் இருப்பதால், தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை சாா்பில் அவலாஞ்சியில் அரசு மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மீன் பண்ணை சேதமடைந்தது. தற்போது வரை மூடப்பட்டுள்ள மீன் பண்ணையை புனரமைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கினாா். இதனைத் தொடா்ந்து பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீன் குஞ்சு உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சுற்றுலாப் பயணிகள் அரசு மீன் பண்ணையை கண்டு ரசிக்கும் வகையில் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com