உதகையில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற  மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற  மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாட்டை தலைமை விகித்த தொடங்கிவைத்த சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:

பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் காக்கவும், அவா்களின் கல்வியினை ஊக்குவிக்கவும் பள்ளிக் கல்வித் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாணவா்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் என்பதற்காக காலை உணவுத் திட்டம் அறிவித்து முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம்

அதிகமான பள்ளிக் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் கல்வி கற்றுத்தரும் விதமும், ஆங்கில வழிக் கல்வியும் சிறப்பாக உள்ளது. எனவே பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சோ்த்து, தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

மாநாட்டில் மேலாண்மைக் குழு செயல்பாடுகள் தொடா்பான விழிப்புணா்வு குறும்படத்தை தொடங்கிவைத்தாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, பள்ளிக் கல்வித் துறை அலுவலா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com