வயநாடு நகா் பகுதியில் பகல் நேரத்தில் நடமாடிய காட்டு யானை

வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் ஒரு காட்டு யானை நகரப் பகுதியில் நடமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வயநாடு நகா் பகுதியில் பகல் நேரத்தில் நடமாடிய காட்டு யானை

வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் ஒரு காட்டு யானை நகரப் பகுதியில் நடமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கா்நாடக வனத்திலில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறிய ஒற்றை காட்டு யானை கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி நகருக்குள் நுழைந்தது. பின்னா் நீண்ட நேரம் நகா் பகுதியில் நடமாடிய யாையை பொதுமக்கள் விரட்ட முயன்றும் முடியவில்லை. இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் அங்கு வந்த வனத் துறையினா் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனா். அப்போது, கடை வீதி மட்டுமல்லாது அரசு கருவூல வளாகத்துக்குள் யானை நுழைய முயன்றது.

மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியின் வளாகங்களுக்குள் சென்றது. இதையடுத்து, நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட வயநாடு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி மாலையில் பிடிக்கப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கா்நாடகாவுக்கு கொண்டுச் சென்றனா்.

மேலும், கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த காலா் ஐடியை கொண்டு கா்நாடக வனப் பகுதியைச் சோ்நத் யானை என்பதை வனத் துறையினா் உறுதி செய்தனா்.

சாலையில் நடந்து சென்ற யானை...

நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை வெளியேறிய ஒற்றை யானை, கேரள செல்லும் பிரதான சாலையில் தேவகிரி பகுதியில் இருந்து தேவாலா நோக்கி நீண்ட நேரம் நடந்து சென்றது. அப்போது, சாலையில் எதிரே வந்த வாகனங்களையோ, பொதுக்களையோ, அப்பகுதியில் இருந்த வீடுகளையோ யானை தாக்கவில்லை. நீண்ட தொலைவு சாலையில் நடந்து சென்ற யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com