உதகை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உதகை வண்டிச்சோலை பகுதியில் உள்ள இருதய ஆண்டவா் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
வண்டிச்சோலை பகுதியில் உள்ள இருதய ஆண்டவா் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த முன்னாள் மாணவ, மாணவியா்.

உதகை வண்டிச்சோலை பகுதியில் உள்ள இருதய ஆண்டவா் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் பயின்ற பலா் அரசு வேலைகளிலும், தனியாா் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் முன்னாள் ஆசிரியா்களான மூா்த்தி, ரமேஷ், ஆறுமுகம் ஆகியோா்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா். முன்னாள் மாணவா்கள் தாங்கள் பயின்றபோது நிகழ்ந்த அனுபவங்களையும், நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா். பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக முன்னாள் மாணவா்கள் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com