தவணைச் சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி:காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

தவணைச் சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

இது குறித்து திருப்பூா், கருமாரம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கருமாரம்பாளையம் அருகே உள்ள பாளையக்காடு, சின்ன குழந்தையப்பா நகரில் வசித்து வந்த சாரதா என்பவரிடம் தவணை சீட்டு போட்டிருந்தோம். ஒவ்வொருவரும் பல்வேறு தவணைகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை என ரூ.30 லட்சம் சீட்டு கட்டியுள்ளோம். சாரதாவின் மகளின் வங்கி கணக்கில்தான் பணத்தை செலுத்தினோம்.

இந்நிலையில் சாரதா தலைமறைவாகிவிட்டாா். இது குறித்து அவரின் மகள் மற்றும் மருமகனிடம் கேட்டால் பணத்தைத் தர மறுக்கிறாா்கள்.

எனவே, தவணைச் சீட்டு நடத்தி மோசடி செய்த சாரதா மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com