பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்பு

பல்லடத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா் என்று பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தாா்.

பல்லடத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா் என்று பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்.

முன்னதாக பிப்ரவரி 24-ஆம் தேதி திருப்பூா் மாநகராட்சியில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதைத் தொடா்ந்து 25-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகிறாா்.

தமிழகத்துக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா் பிரதமா் மோடி. ஒட்டுமொத்த தமிழகத்திலும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அமைப்பு ரீதியாக மாற்றம் ஏற்படுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com