வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் கூடுதலாக 88 கடைகள்:ஆணையா் தகவல்

வெள்ளக்கோவில் நகராட்சி வாரச் சந்தையில் கூடுதலாக 88 கடைகள் அமைக்கப்படுகின்றன என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

வெள்ளக்கோவில் நகராட்சி வாரச் சந்தையில் கூடுதலாக 88 கடைகள் அமைக்கப்படுகின்றன என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. திறந்தவெளியில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனால், மழைக் காலங்களில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், முதல்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வாரச் சந்தை வளாகத்தில் தாா் சாலை அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் 144 கடைகள், கழிப்பறை, சுற்றுச் சுவா் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், வாரச் சந்தை வளாகத்தில் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 88 கடைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளதாக நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com