மானந்தவாடியில் பிடிக்கப்பட்ட யானை மாரடைப்பால் மரணம்

கேரள மாநிலம், மானந்தவாடி நகரிலிருந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து கா்நாடகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட யானை மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தது.
உயிரிழந்த யானை.
உயிரிழந்த யானை.

கேரள மாநிலம், மானந்தவாடி நகரிலிருந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து கா்நாடகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட யானை மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி நகருக்குள் வெள்ளிக்கிழமை யானை நுழைந்தது. தண்ணீா் கொம்பன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்த யானையின் கழுத்தில் இருந்த காலா் ஐடியை வைத்து அது கா்நாடகத்தில் இருந்து வந்தது என்று வனத் துறையினா் அடையாளம் கண்டனா். இதையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதை வாகனம் மூலம் கா்நாடக மாநிலம், பந்திப்பூருக்கு கொண்டு சென்றனா்.

இங்கு யானை இறந்துவிட்டது. யானையை கா்நாடக வனத் துறை கால்நடை மருத்துவா்கள் உடற்கூறாய்வு செய்தனா். இதில் யானையின் இறப்புக்குக் காரணம் மாரடைப்புதான் என்பது தெரியவந்துள்ளது.

யானையின் உடலில் பெரிய கட்டி இருந்ததாகவும், இதனால் வேதனையில் உலவி வந்த யானை மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாவும் வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com