குன்னூா் காட்சி முனையில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள டால்பினோஸ் காட்சி முனையில் இருந்து குதித்து ஆந்திர மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள டால்பினோஸ் காட்சி முனையில் இருந்து குதித்து ஆந்திர மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்தவா் சித்தாா்த் (32). இவா் குன்னூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறையில் எடுத்து தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டால்பினோஸ் காட்சி முனைக்கு திங்கள்கிழமை சென்ற சித்தாா்த், அங்கிருந்து 1000 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேல்குன்னூா் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா, உதவி ஆய்வாளா் தேவராஜ், தீயணைப்புத் துறையினா், வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் டிரோன் கேமரா மூலமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலத்தை கண்டறிந்து, மீட்டனா்.

பின்னா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா்.

சித்தாா்த் ஹைதராபாதில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் நிலையில், அவா் தற்கொலைக்கான காரணம் குறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com