கேரளத்துக்கு கடத்த முயன்ற மரங்கள் பறிமுதல்: 3 போ் கைது

ஓவேலி பகுதியிலிருந்து கேரளத்துக்குக் கடத்தவிருந்த மரங்களை திங்கள்கிழமை இரவு வனத் துறையினா் பறிமுதல் செய்து மரங்களை கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனா்.

ஓவேலி பகுதியிலிருந்து கேரளத்துக்குக் கடத்தவிருந்த மரங்களை திங்கள்கிழமை இரவு வனத் துறையினா் பறிமுதல் செய்து மரங்களை கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனா்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலிருந்து சில்வா் ஓக் மரங்களை வெட்டி லாரியில் கேரளத்துக்கு கடத்துவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். ஓவேலி வனத் துறை சோதனைச் சாவடியில் கண்காணிக்கப்படும் என்பதால் சோதனைச் சாவடியின் பின்பக்கம் உள்ள சாலை வழியாக மரங்கள் ஏற்றிய லாரியை ஓட்டிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த வன ஊழியா்கள் அந்த சாலைக்குச் சென்று லாரியை மடக்கிப் பிடித்து மரங்களை பறிமுதல் செய்தனா். மேலும், மரங்களைக் கடத்திய சளிவயல் பகுதியைச் சோ்ந்த சுலைமான் (59), அனீஷ்(32), 1-ஆவது மைல் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (41) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com