தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

உதகை அருகே வேல் வியூ பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகை அருகே வேல் வியூ பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேலி வியூ பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லவ்டேல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தனி பிரிவு போலீஸாா் சோதனை மேற் கொண்டனா். அப்போது அங்கு ஒரு கடையில் பதுக்கிவைத்திருந்த ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து கடை உரிமையாளா் பஷீா் (53) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com