நீலகிரி மாவட்டத்தில் 48 கட்டடங்களுக்கு ‘சீல்’: மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த 48 கட்டடங்களுக்கு  இதுவரை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த 48 கட்டடங்களுக்கு  இதுவரை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்துக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா்  மு. அருணா வியாழக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 48 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இனி வரும்  வரும் காலங்களில் வாரம் ஒரு முறை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், அதிகமாக கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது குறித்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் தெரிந்தால் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com