ஆட்சியா்  அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி வி.சரவணன்.
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி வி.சரவணன்.

சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கேலோ இந்தியா விளையாட்டு வீரா் மனு

கேலோ இந்தியா விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வி.சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், குண்டாடா கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி கேலோ இந்தியா விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வி.சரவணன்  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு  அளித்தனா். நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட குண்டாடா கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால் அந்த கிராமத்தில் வாழும் பள்ளிக் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், கா்ப்பிணிகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, தில்லியில் 2023 டிசம்பலில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 150 கிலோ பளு தூக்கும் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டாடா கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வி.சரவணன் தலைமையில் கிராம மக்கள்  சாலை வசதி கோரி ஆட்சியா் மு.அருணாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com