கூடலூா் பகுதி விவசாயிகள் கவனத்துக்கு !

கூடலூா் பகுதியில் பாகற்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூடலூா் பகுதியில் பாகற்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கூடலூா் பகுதியில் தற்போது பாகற்காய் பயிரில் வைரஸ் நோய்த் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதையடுத்து, கூடலூா் பகுதியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி, உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா்கள் ராஜேந்திரன், வினோத்குமாா், ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோா் பிப்ரவரி 1-ஆம் தேதி கூட்டுக் கள ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, பாடந்தொரை கிராமத்தில் உள்ள விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள செடிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக மண் பரிசோதனை தவறாமல் செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை பயன்படுத்த வேண்டும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சாகுபடி தொழில்நுட்பங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். சரியான அளவில் பூச்சி மற்றும் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஆய்வு முடிவில் வழங்கப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com