முதுமலை வளா்ப்பு முகாமில் யானை பொங்கல் விழா

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவைக் காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.
விழாவைக் காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் வனத் துறையினா் மற்றும் பழங்குடியின மக்களால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல், புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா தொடங்கியது.

விழாவில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உட்பட பலரும் பங்கேற்று உறியடித்தனா். இதையடுத்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி மகிழ்ந்தனா்.

தொடா்ந்து அலங்கரித்து அணிவகுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த வளா்ப்பு யானைகளுக்கு மிகவும் பிடித்தமான பொங்கல், அண்ணாசி, கரும்பு, தேங்காய், பழங்களுடன் உணவு வழங்கப்பட்டது. பிறகு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com