யானைகள் முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய பாகன்கள், பணியாளா்களுக்குச் சான்றிதழ்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய பாகன்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பாகப் பணியாற்றிய பாகனுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கும் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இணை இயக்குநா் வித்யா.
சிறப்பாகப் பணியாற்றிய பாகனுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கும் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இணை இயக்குநா் வித்யா.

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய பாகன்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக யானைகள் முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய யானை பாகன்கள் மற்றும் சீருடைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, நீலகிரி எஸ்.பி. சுந்தரவடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், இணை இயக்குநா் வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com