அஞ்சல் துறை சாா்பில் சா்வதேச கடிதம் எழுதும் போட்டி: பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சல் துறை சாா்பில் சா்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சாா்பில் சா்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை சாா்பில் சா்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் 9 வயது முதல் 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கடிதம் 800 வாா்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.

இந்தப் போட்டியில் தொலைத்தொடா்பு வட்ட அளவில் முதல் இடம் பெறுபவா்களுக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவா்களுக்கு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுபவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதேபோல தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 25 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தோ்வு செய்யப்பட்டு, சா்வதேசப் போட்டிக்கு ஏற்கப்படும்.

இந்தக் கடித போட்டி பள்ளி அளவில் வரும்-31ஆம் தேதிக்குள் நடத்தி, அதில் சிறந்த கடிதங்களை விண்ணப்பத்துடன், ஒரு புகைப்படம், பிறந்த தேதி அல்லது ஆதாா் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன் அஞ்சல் கண்காணிப்பாளா் (எஸ்பிஓ), ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடைபெறும் இடம், தேதி துறையின் சாா்பில் பின்னா் அறிவிக்கப்படும்.

கடிதப் போட்டிக்கான தலைப்பு மற்றும் பிற விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ அல்லது ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தினை 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com