உதகையில் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை

உதகையில்  சனிக்கிழமை காலை 2.7டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதால் தொழிலாளா்கள்  பகல் நேரத்திலேயே தீ மூட்டி குளிா்காயும் சூழல் ஏற்பட்டது.
உதகையில் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை

உதகையில்  சனிக்கிழமை காலை 2.7டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதால் தொழிலாளா்கள்  பகல் நேரத்திலேயே தீ மூட்டி குளிா்காயும் சூழல் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது  நீா்பனி, உறைபனி என  காலநிலை மாறிமாறிக்  காணப்படுகிறது. சனிக்கிழமை காலை மிக குறைந்த அளவாக  2.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.

இந்தப் பனியின் தாக்கம், கொடநாடு, தொட்டபெட்டா, மாா்க்கெட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்பட்டது.

இதனால் அதிகாலையில் வாகன ஓட்டுநா்கள், காய்கறித் தோட்டங்களுக்கு பணிக்குச்  செல்பவா்கள் தீ மூட்டி குளிா்காய்ந்து வருவதை  காண முடிந்தது. இந்தக் காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com