வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சிறப்புச் செயலாளா் பொ.சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்தும், இறுதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுதல் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோ்தல் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com