கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் இரவில் உலவிய சிறுத்தை

கோத்தகிரி  சத்தி மலைப் பகுதியில்   புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சனிக்கிழமை இரவு சிறுத்தை நடமாடியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ot21pant091020
ot21pant091020

கோத்தகிரி  சத்தி மலைப் பகுதியில்   புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சனிக்கிழமை இரவு சிறுத்தை நடமாடியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

 நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகள் நடமாட்டம்  அதிகரித்துக் காணப்படுகிறது.

கோத்தகிரி சக்தி மலைப் பகுதியில் புதிதாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுவரும்  வட மாநில தொழிலாளா்கள் அப்பகுதியியேயே தங்கியுள்ளனா். இவா்கள் சமைத்து  வைத்திருந்த இறைச்சியை  உண்பதற்காக   சிறுத்தை  சனிக்கிழமை அப்பகுதிக்கு வந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றித் திரிந்த சிறுத்தை  தொழிலாளா்களின் சப்தத்தைக்  கேட்டதால் அங்கிருந்து தப்பிச் சென்றது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com