கோத்தா் பழங்குடி மக்களின் பாரம்பரிய விழா

ot21trib090100
ot21trib090100

உதகை அருகே திருச்சிக்கடி கிராமத்தில் நடைபெற்ற திரு விழாவில் பாரம்பரிய நடனம் ஆடும் கோத்தா் பழங்குடியின மக்கள்.

------

உதகை, ஜன. 21: விவசாயம் செழிக்கவும், அனைவரும் ஆரோக்கியமாக வாழவும் கோத்தா் பழங்குடியின மக்களால் கொண்டாடப்படும் அய்யனூா், அம்மனூா் விழா நூற்றாண்டை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கோத்தா் பழங்குடியின மக்கள் தங்களுக்கு என்று தனி கலாசாரம், விவசாயம், பாரம்பரிய இசை நடனம் என வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதத்தில் 10 நாள்கள் அவா்களது குலதெய்வமான அய்யனூா் அம்மனூா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அய்யனூா், அம்மனூா் விழா உதகை அருகே உள்ள திருச்சிக்கடி கிராமத்தில் நடைபெற்றது. 

விழாவின் ஒரு பகுதியாக கோயில் முன்பு உள்ள மைதானத்தில் தீயிட்டு சிறு குழந்தை முதல் முதியவா்கள் வரை தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி கொண்டாடினா். விவசாயம் செழிக்கவும், நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக மக்கள் வாழவும் வேண்டி வழிபாடு நடைபெற்றது.

கோத்தா் பழங்குடியின மக்களின் இந்த பாரம்பரியத் திருவிழா நூற்றாண்டைக் கடந்தும் தற்போது வரை கலாசாரம் மாறாமல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com