ot21tour091159
ot21tour091159

பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com