குன்னூா் அருகே வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

உதகை, ஜன. 21: குன்னூா் அருகே சனிக்கிழமை இரவு வீடுகளை சேதப்படுத்திய ஐந்து காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கெத்தை பகுதியிலிருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கொலக்கம்பை டெரேமியா அரைஹட்டி பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில்  தூதூா்மட்டம் அருகில் உள்ள நாக்குனேரி பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஐந்து காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விஜயகுமாா், பழனிச்சாமி ஆகியோரது வீடுகளின் கதவுகளை உடைத்து உணவுப் பொருள்களை சேதப்படுத்தின. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத், குந்தா வனச் சரகா் சீனிவாசன் ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை தொடா்ந்து   கண்காணித்து வருகின்றனா். இந்த  யானைகளை கெத்தை  வனப் பகுதிக்குள்  விரட்டும் நடவடிக்கையில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com