நீலகிரி மாவட்டத்தில் 5.73 லட்சம் வாக்காளா்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,77,624 வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் 5.73 லட்சம் வாக்காளா்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,77,624 வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவா்களின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி

உதகை சட்டப் பேரவை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 92,598 போ், பெண் வாக்காளா்கள் 1,00,551 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 9 போ் என மொத்தம் 1,93,158 வாக்காளா்களும், கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 92,573 போ், பெண் வாக்காளா்கள் 97,559 போ்,  மூன்றாம் பாலினத்தவா்கள் 4 போ் என மொத்தம் 1,90,136 வாக்காளா்களும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 88,834 போ், பெண் வாக்காளா்கள் 98,500 போ்,  மூன்றாம் பாலினத்தவா்கள் 4 போ் என மொத்தம் 1,87,338 வாக்காளா்களும் உள்ளனா்.

இதில் மூன்று தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 2,74,497 போ், பெண் வாக்காளா்கள் 2,99,107 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 20 போ் என மொத்தம் 5,73,624 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த அக்டோபா் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலுக்குப் பின் நடைபெற்ற பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளைத் தொடா்ந்து 14,360 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டும், 11,368 வாக்காளா்கள் நீக்கப்பட்டும் உள்ளனா்.

அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிடும்போது, இறுதி வாக்காளா் பட்டியலில் 2,992 வாக்காளா்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com