முக்குருத்தி தேசிய பூங்கா வனப் பகுதியில் தமிழக- கேரள வனத் துறையினா் கூட்டு ரோந்து

முக்குருத்தி தேசிய பூங்கா வனப் பகுதியில் தமிழக- கேரள வனத் துறையினா் திங்கள்கிழமை கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
தமிழக-கேரள வன எல்லையில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இருமாநில வனத் துறையினா்.
தமிழக-கேரள வன எல்லையில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இருமாநில வனத் துறையினா்.

முக்குருத்தி தேசிய பூங்கா வனப் பகுதியில் தமிழக- கேரள வனத் துறையினா் திங்கள்கிழமை கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா துணை கள இயக்குநா் வித்யா உத்தரவின்படி, தமிழக-கேரள எல்லையில் உள்ள இருமாநில எல்லை வனப் பகுதிகளில் வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வனத் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ளவும் முக்குருத்தி தேசிய பூங்கா வனச் சரக அலுவலா் யுவராஜ் மற்றும் கேரள மாநிலத்தின் சைலண்ட் வேலி தேசிய பூங்காவின் வன உயிரினக் காப்பாளா் வினோத் ஆகியோரின் தலைமையில் இருமாநில வன அலுவலா்கள் மற்றும் வனப் பணியாளா்கள் முகாமிட்டு கூட்டு ரோந்துப் பணியை மேற்கொண்டனா்.

மேலும், வனத்துக்குள் அந்நியா்கள் சட்ட விரோதமாக நுழைந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com